உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிராபிக் போலீசாருக்கு நுரையீரல் பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

டிராபிக் போலீசாருக்கு நுரையீரல் பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி: கிழக்கு போக்குவரத்து போலீஸ் சார்பில், டிராபிக் சிக்னலில் பணியாற்றும் காவலர்களுக்கு நுரையீரல் பரிசோதனை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. போலீஸ் துறையில் போக்குவரத்து ஸ்டேஷன்களில் பணியாற்றுவதும், சிக்னலில் பணியாற்றவது சவாலனது. புகை கக்கும் வாகனங்கள், ஓயாத இரைச்சல் சிக்னல்களில் ஒரு மணி நேரம் இருந்தாலே, முகங்களில் கரும்புகை படலங்கள் படிந்து விடும். முக கவசம் இன்றி நாள் முழுதும் சிக்னலில் நிற்கும் போக்குவரத்து போலீசாருக்கு, காற்றில் கலக்கும் நுண் துகள்கள் நேரடியாக சுவாசித்து நுரையீரலை பாதிக்கிறது. இதனால் புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் நுரையீரல் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. நேரு வீதி கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்த பரிசோதனை முகாமில், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி தலைமை தாங்கினார். எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். சப்இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி டாக்டர் ஐஸ்வர்யா சீனிவாசன் குழுவினர், போக்குவரத்து போலீசாருக்கு நுரையீரல் பாதிப்புகள் குறித்து பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினர். சிக்னலில் பணியாற்றும் போலீசாருக்கு என்.95 முக கவசமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை