உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மா.கம்யூ., கிளை மாநாடு

மா.கம்யூ., கிளை மாநாடு

புதுச்சேரி: பெத்துசெட்டிப்பேட்டை மா.கம்யூ., 24 வது கிளை மாநாடு நடந்தது.குமார் தலைமை தாங்கினார். குணசேகரன் மாநாடு செங்கொடியை ஏற்றி வைத்தார். செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன் மாநாட்டினை துவக்கி வைத்தார், கமிட்டி உறுப்பினர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். கமிட்டி செயலாளர் ராம்ஜி தொகுத்து வழங்கினார். மாநாட்டில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கிளை மாநாட்டில், பெத்துசெட்டிபேட்டை பகுதி வார்டு முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.தடையில்லா மின்சாரம், கொல்லி மேடு மைதான இடத்தை சிறுவர் விளையாட்டு பூங்காவாக மாற்ற வேண்டும், குளக்கரை வீதியில் புதிதாக ரேஷன் கடையை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.மின் கட்டண உயர்வு மற்றும் மின்துறை தனியார் மயமாவதை திரும்பப் பெறவேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், புதிய கிளைச் செயலாளராக நிலவழகன் தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை