மேலும் செய்திகள்
சாரதாம்பாள் கோவிலில் ஆஞ்சநேயர் ஹோமம்
06-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில், 50ம் ஆண்டு சாரதா நவராத்திரியை முன்னிட்டு மகா சண்டி ஹோமம் நேற்று நடந்தது.புதுச்சேரி, எல்லப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 50ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் கடந்த 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.அதையொட்டி, தினமும் காலை 8:00 மணி முதல் 12:30 மணி வரை பல்வேறு சிறப்பு ஹோமங்கள் மற்றும் மாலை 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று (11ம் தேதி) காலை 7:30 மணி முதல் 1:30 வரை மகாசண்டி ஹோமம் நடந்தது.தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் மற்றும் தீபாராதணை நடந்தது. மாலை 6:00 மணிக்கு கலை இளநன்மணி சகோதரிகளின் பாட்டு, சரவணன் அருள் நாட்டியாலயாவின் பாரம் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.இன்று (12ம் தேதி) ஊஞ்சல் உற்சவத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.
06-Oct-2024