உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோரப்பட்டு கோவில்களில் மகா கும்பாபிேஷகம் 

சோரப்பட்டு கோவில்களில் மகா கும்பாபிேஷகம் 

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு கிராமத்தில் மகா கணபதி, மாரியம்மன், திரவுபதியம்மன், பச்சை வாழியம்மன், பிடாரி அம்மன், பொறையாத்தம்மன், ஐயனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்கள் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த 13ம் தேதி காலை 9:00 மணிக்கு மகாகணபதி ஹோமம், மகாசுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, இரவு 7:00 மணிக்கு அக்னி பிரதிஷ்டை, முதல் யாகசாலை பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று (15ம் தேதி) காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 8:15 மணிக்கு விநாயகர் கோவில், 8:45 மணிக்கு பூரணி, பொற்கலை சமேத ஐயனாரப்பன், 9:15 மணிக்கு பிடாரி அம்மன், பொறையாத்தம்மன், 9:50 மணிக்கு திரவுபதியம்மன், மாரியம்மன், 10.15 மணிக்கு பச்சைவாழியம்மன் ஆகிய கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நடந்தது. இதில், சோரப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ