உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தின வழிபாடு

சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தின வழிபாடு

புதுச்சேரி : புதுச்சேரி, பிள்ளைச்சாவடி, இ.சி.ஆர்., கமல சாய்பாபா கோவிலில், சீரடி சாய்பாபாவின் 106ம் ஆண்டு மகா சமாதி தின வழிபாடு நடந்தது.இதையொட்டி, காலை 6:00 மணிக்கு கொடியேற்றம், மூல மந்திர ஹோமம் நடந்தது. 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு, கலச அபிஷேகம் மற்றும் 108 பன்னீர் குட அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, ஷரன் ஷரனி இசைக்குழுவினரின் சாய் பஜனை நடந்தது. காலை 11:30 மணிக்கு பல்லக்கு உற்சவம், 1:30 மணிக்கு சாய் சத்சரித பாராயணம், சாய் நாமஜெபம் மற்றும் ஜோதி வழிபாடு நடந்தது.பின்னர், சாய்பக்தர்களால் எழுதப்பட்ட 'சீரடி சாய்பாபாவின் நாமாவளி' புத்தகங்கள் வெளியிடப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஆரத்தி மற்றும் பஜனை நிகழ்ச்சி நடந்தது.திரளான பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை