நிதி நிறுவன ஊழியரை தாக்கிய நபருக்கு வலை
புதுச்சேரி : தனியார் நிதி நிறுவன ஊழியரை கல்லால் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, தருமாபுரி திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், 47; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் கடந்த 7ம் தேதி காலை நடேசன் நகரில் உள்ள தனது அலுவலகத்திற்கு ரெட்டியார்பாளையம் சாலை வழியாக காரில் சென்றார்.அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர், கார் மீது மோதுவது போல் சென்று, ஆறுமுகத்தை திட்டினார். இதனை ஆறுமுகம் காரை நிறுத்திவிட்டு, தட்டி கேட்டார். அப்போது அந்த நபர் கீழே கடந்த கல்லை எடுத்து ஆறுமுகத்தை தாக்கிவிட்டு தப்பி சென்றார். காயமடைந்த ஆறுமுகம் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.