உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கஞ்சா விற்ற நபர் கைது

 கஞ்சா விற்ற நபர் கைது

புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து, 743 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அரியாங்குப்பம், இந்தியன் வங்கி அருகே சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபர் மற்றும் காரை பிடித்த போலீசார் சோதனை செய்தபோது, 743 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் சின்ன வீராம்பட்டினத்தை சேர்ந்த தேவராஜ் மகன் அஜித்குமார், 22; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் 743 கிராம் கஞ்சா பொட்டலங்கள், கார், 2 மொபைல், ரூ.1500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் அஜித்குமார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை