வேன் திருடிய நபர் கைது
காரைக்கால்; காரைக்கால், சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 35. இவர், தனியார் ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்தமாக மினி லோடு வேன் வைத்தும் தொழில் செய்து வருகிறார்.வழக்கம் போல் கம்பெனி வாசல் முன், வாகனத்தை நிறுத்தி விட்டு நேற்று முன்தினம் ராஜேஷ்குமார் வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, மினி லோடு வேன் காணவில்லை. பின், அவரது வாகனத்தை பொறையார் சாலை வழியாக சென்ற நிலையில், அவரது உறவினர்கள் நிறுத்தி, டிரைவரிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், வாகனத்தையும், அதனை ஓட்டி வந்த டிரைவரையும் நகர காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர். போலீசார் விசாரணையில், வேனை ஓட்டி வந்த டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், அம்பாள் நகரை சேர்ந்த சந்திரசேகர் மகன் அருண், 38, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, லோடு வேனை பறிமுதல் செய்தனர்.