மாஜி மகளிர்ஆணைய உறுப்பினரை மிரட்டியவர் கைது
பாகூர்; பாகூர் மேற்கு வீதியை சேர்ந்தவர் நாகஜோதி, 60. புதுச்சேரி மகளிர் ஆணைய முன்னாள் உறுப்பினரான இவர், கடந்த 26ம் தேதி பாகூர் சிவன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த பாகூர் பங்களா தெருவை சேர்ந்த ரமேஷ், குடிபோதையில் அவரை வழிமறித்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். நாகஜோதி புகாரின் பேரில், பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஹமீது உசேன் வழக்கு பதிந்து ரமேஷ் கைது செய்தனர்.