உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

 கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை, இ.சி.ஆர்., மீன் மார்க்கெட் வழியாக செல்லும் பொதுமக்களை நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் மதுபோதையில் கத்தியை காட்டி மிரட்டுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலறிந்த, உதவி சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், லாஸ்பேட்டை, சாமிப்பிள்ளை தோட்டம், லெனின் நகர் சூரியபிரகாஷ், 18; என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி