மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
05-Oct-2026
வில்லியனுார்: வில்லியனுார் அருகே கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.,3) இரவு சுல்தான்பேட்டை, ஜி.என்.பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். நடராஜன் நகர் பகுதியில் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கத்தியுடன் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், ஜி.என்.பாளையத்தை சேர்ந்த சரவணன் மகன் சரண்ராஜ், 27, என, தெரியவந்தது. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, சரண்ராஜை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இன்று (நவ.,4) காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
05-Oct-2026