உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெயிண்ட் ஆர்டர் கொடுத்து ரூ.49,000 இழந்த நபர்

பெயிண்ட் ஆர்டர் கொடுத்து ரூ.49,000 இழந்த நபர்

புதுச்சேரி, : லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர், ஆன் லைனில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த பெயிண்ட் கம்பெனி விளம் பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து, ரூ.49 ஆயிரத்து 500 முன்பணம் செலுத்தி பெயிண்ட் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பொருள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படவில்லை. லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர், சுற்றுலா தொடர்பாக ஆன் லைனில் தேடியுள்ளார். பின், அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், சுற்றுலா இ டங்களை பார்வையிட பணம் அனுப்பும்படி கூறியுள்ளார். இதை நம்பி, 7 ஆயிரத்து 452 ரூபாய் அனுப்பி ஏமாந்துள்ளார். சண்முகாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், வாட்ஸ் ஆப் மூலம் அடையாளம் தெரியாத நபருடன் பேசி பழகி வந்துள்ளார். மேலும், அவருக்கு தன்னுடைய புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, மர்ம நபர் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து, உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !