உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாலிபரை தாக்கிய நபருக்கு வலை

 வாலிபரை தாக்கிய நபருக்கு வலை

அரியாங்குப்பம்: முன்விரோதத்தில், வாலிபரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். வீராம்பட்டினம், சிவாஜி நகரை சேர்ந்தவர் மதுபாலன், 30. இவர் வீராம்பட்டினம் கடற்கரையில் படகு ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் வேந்தன் (எ) ஜான், 40. இவர்களுக்கிடையே, படகு சவாரி ஏற்றுவதில், தொழில் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதற்காக, மதுபாலன், கடந்த 7ம் தேதி, வீராம்பட்டினம் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஜான், மதுபாலன் பைக்கை சேதப்படுத்தி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மதுபாலன் புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ஜானை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை