கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது மங்கலம் போலீசார் அதிரடி
வில்லியனுார்: மங்கலம் அருகே கஞ்சா விற்ற மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் அடுத்த மங்கலம் அய்யனார் கோவில் பகுதியில், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன் பேரில், மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டு அங்கிருந்து மூன்று இளைஞர்கள் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி, பரிசோதித்தில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். விசாரணையில், கடலுார் மாவட்டம், சிங்கிரிகோவில் அடுத்த புதுக்கடை பகுதியை சேர்ந்த ராமசுப்பு மகன் கிரண்குமார், 21; தனசேகரன் மகன் ரோஹித், 19; உறுவையாறு செல்வா நகர், ராசு மகன் பட்ட முருகன், 23, ஆகியோர் என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 160 கிராம் கஞ்சா, மூன்று மொபைல் போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.