உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு ஊழியரை மிரட்டி கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

அரசு ஊழியரை மிரட்டி கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே நள்ளிரவில் வீட்டில் இருந்த அரசு ஊழியரை மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த பத்துக்கண்ணு கிரீன் சிட்டி நகரை சேர்ந்தவர் ரகு. இவர், புதுச்சேரி மின்துறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலதி, 34. இவர் திருவண்ணாமலையில் அரசு செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 9ம் தேதி ரகு தனது சொந்த ஊரான திருக்கனுார் அடுத்த கைக்கிளிப்பட்டு கிராமத்திற்கு சென்றுள்ளார். வீட்டில் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு மாலதி, 7 வயது மகன் மற்றும் அவரது பாட்டி ஆகியோருடன் துாங்கினார்.நள்ளிரவு 2:30 மணிக்கு மேல் 30 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த மூன்று நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்தனர். கத்தியை காட்டி மிரட்டி மாலதி அணிந்திருந்த தாலி ஜெயின், மோதிரம், பாட்டி அணிந்திருந்த தங்க ஜெயின் என, 10 சவரன் நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த 3 லட்சம் ரொக்க பணம், செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, படுக்கை அறைக்குள் மூவரையும் வைத்து பூட்டிவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.பின், ரகு வீட்டிற்கு வந்த பிறகே அறைக்கதவை திறந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவைத்து தடையங்களை சேகரித்தனர். இச்சம்பவம் வில்லியனுார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ