மேலும் செய்திகள்
ஏ.ஐ., உலகில் செம்மொழி தமிழ் பயிலரங்கம் துவக்கம்
25-Jul-2025
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மூன்று நாள் முதன்மை பயிற்சியாளர் பயிலரங்கம் நடந்தது. இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைந்து மூன்று நாள் முதன்மை பயிற்சியாளர் பயிலரங்கம் நடைபெற்றது. கடந்த 31ம் தேதி முதல் நேற்று வரை நடந்த பயிலரங்கில், 'கர்மயோகி திட்டம்' என்ற தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு திட்டம் பற்றி விளக்கப்பட்டது. பயிலரங்க துவக்க விழாவில், பல்கலைக்கழக மானியக்குழு இணை செயலாளர் ஜிதேந்திர குமார் திரிபாதி பங்கேற்று, திறன் மேம்பாட்டு இயக்கங்களில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு பற்றி பேசினார். துணை வேந்தர் பிரகாஷ்பாபு, பொறுப்புணர்வோடு செயல்படும் மற்றும் சீர்திருத்தங்களை முன்னிலைபடுத்தும் நிர்வாகத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாக திறன் மேம்பாட்டின் கட்டமைக்கப்பட்ட அடித்தளம் மிக முக்கியம் என கூறினார். திறன் மேம்பாட்டு ஆணையம் இணை செயலாளர் தீக் ஷா ராஜ்புத், முதன்மை பயிற்சியாளர் பயிற்சியின் நோக்கங்கள், இதன் நீண்டகால தாக்கங்கள் பற்றி விளக்கமளித்தார். முன்னதாக, ஒருங்கிணைப்பாளர் மாளவிகா, ஆசிரியர் பயிற்சி திட்டம் மைய இயக்குநர் அருள் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியை, உதவி பேராசிரியர் சிருஜானா தொகுத்து வழங்கினார். நிதி அலுவலர் லாசர், பல்கலைக்கழக நுாலகர் விஜயகுமார், மேலாண்மை பள்ளியின் டீன் நடராஜன், மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பு ஆராய்ச்சி மைய இயக்குநர் சுைஹப் முகமது ஹனீப் உள்பட பலர் பங்கேற்றனர்.
25-Jul-2025