மேலும் செய்திகள்
இன்று இனிதாக
26-Feb-2026
புதுச்சேரி: மாசிமக உற்சவத்தில் பங்கேற்பதற்காக, மயிலம் முருகர் நாளை புதுச்சேரி வருகிறார். நாளை மாலை 4:00 மணியளவில் மயிலம் முருகர், சாரம் வந்தடைகிறார். இதனைத் தொடர்ந்து, சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு விசேஷ மஹா அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடாகி, சாரம் வீதியுலா கண்டருளி, புதுச்சேரியில் உள்ள ஆதீனத் திருமடத்திற்கு எழுந்தருளுவார். மாசிமகத் திருநாளான நாளை மறுநாள் (3ம் தேதி) தீர்த்தவாரி முடிந்து, வரும் மார்ச் 7ம் தேதி (சனிக் கிழமை) அதிகாலை 4:00 ம ணிக்கு சுவாமி மீண்டும் சாரம் வந்தடைகிறார். அன்று காலை 8:00 மணிக்கு ம ஹா அபிஷேகம், 10:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. அதன் பின், சுவாமி மயிலம் நோக்கிப் புறப்படுவார். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி நீலகண்டன் மற்றும் உபயதாரர்கள், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.
26-Feb-2026