மயங்கி விழுந்து மெக்கானிக் பலி
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, திலகர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 48; பைக் மெக்கானிக். இவருக்கு பவானி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிரகாஷ், அதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திய பின் நோய்க்கான மாத்திரை சாப்பிட்டு துாங்கியவர், நேற்று அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் சந்தோஷ் மற்றும் உறவினர்கள் பிரகாைஷ, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதனை செய்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தன்வந்தரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.