வேளாங்கண்ணி பக்தர்களுக்கு மருத்துவ முகாம்
புதுச்சேரி : தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஏற்பாட்டில், வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு முருங்கப்பாக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். இதில் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். வீதிகள் மற்றும் சாலைகளில் குப்பைகளை போடுவதால், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆகையால் வீதிகளில் குப்பைகள் போட வேண்டாம், மக்கும் குப்பை மக்காத குப்பை மற்றும் கண்ணாடி பொருட்களை முறையாக குப்பை தொட்டியில் மக்கள் போட வேண்டும் என தொழிலதிபர் சார்லஸ் மார்டின் கேட்டுக் கொண்டார்.