மருத்துவ பரிசோதனை முகாம்
புதுச்சேரி: லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் போலீசாருக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.புதுச்சேரி, லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் புதுச்சேரி போலீசாருக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.சீனியர் எஸ்.பி., அனிதா ராய், புதுச்சேரியில் பணியாற்றும் போலீசார் ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் சமர்க்க வேண்டுமென உத்தரவிட்டார்.இதையடுத்து,போலீசாருக்கு, லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இதில், டாக்டர் போஸ்கோ சந்திரகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 100க்கும் மேற்பட்ட போலீசாருக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனைக்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்லுாரி தலைமை செயல் அதிகாரி அன்பு செய்திருந்தார்.