உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ கருத்தரங்கு

மருத்துவ கருத்தரங்கு

புதுச்சேரி : புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் நடந்த தண்டுவட அறுவை சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கில், சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர்.மருத்துவ கண்காணிப் பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன் முன்னிலை வகித்தார். சென்னை, கவேரி, மருத்துவமனை எலும்பு மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவர் சோமசுந்தர், தண்டுவட பிரச்னைகள் குறித்தும், அதற்கான அறுவை சிகிச்சையின், அடுத்த 10 ஆண்டுகளுக்கான புதிய சிகிச்சை முறைகள் குறித்தும், விளக்கம் அளித்தார்.நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு அதிகாரி குணேஸ்வரி, குறை தீர்ப்பு அதிகாரி ரவி உட்பட சிறப்பு மருத்துவ அதிகாரிகள், முதுநிலை பயிலும் மருத்துவ மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ