மருத்துவ மாணவி மாயம் போலீசார் விசாரணை
புதுச்சேரி:புதுச்சேரியில் மாயமான பல்மருத்துவக் கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி எல்லப்பிள்ளைசாவடி அண்ணா நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் பகத்சிங்,45; ஏ.எஸ்.ஐ., இவரது தங்கை மகள் வர்ஷினிபிரியா,20; புதுச்சேரியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்., படித்து வருகிறார்.இவர் வார நாட்களில் கல்லுாரி விடுதியிலும், விடுமுறை நாட்களில் தாய்மாமன் பகத்சிங் வீட்டிலும் தங்குவது வழக்கம். அதன்படி கடந்த 4ம் தேதி மாலை பகத்சிங் வீட்டிற்கு வர்ஷினிபிரியா வந்தார். பகத்சிங் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த போது வர்ஷினிபிரியாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது மொபைல் போன் வீட்டிலேயே இருந்தது. இதுகுறித்து பகத்சிங் அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மாயமான வர்ஷினிபிரியாவை தேடி வருகின்றனர்.