உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலீசாருக்கு தியான பயிற்சி

 போலீசாருக்கு தியான பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறை சார்பில் 'ஆர்ட் ஆப் லிவிங்' போலீசாருக்கான மனம் மற்றும் உடல் நலனை மேம்படுத்தும் நோக்கில் தியான மற்றும் மூச்சு பயிற்சி பயிலரங்கு நேற்று துவங்கியது. கோரிமேடு சமுதாய நலக்கூடத்தில் துவங்கிய பயிலரங்கு வரும் 21ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. தியான மற்றும் மூச்சுப் பயிற்சி பயிலரங்கை டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் துவக்கி வைத்து, மனநல பராமரிப்பு மற்றும் பணிச்சுமை குறைப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். எஸ்.பி., ரங்கநாதன் தலைமை தாங்கினார். பயிலரங்கில் ஐ.ஆர்.பி.என். உட்பட 176 போலீசார் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் செல்வநாதன் மூச்சுப் பயிற்சியின் பயன்களை விளக்கி கூறி, தினசரி குறைந்தது 20 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சியை பழக்கமாக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பயிலரங்கில், போலீசாருக்கான பணிச்சுமை மற்றும் குடும்பச் சூழ்நிலைகளில் ஏற்படும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த நடைமுறை நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை