மழை நிவாரணம் குறித்து அறிய அலுவலகத்தில் கூடிய கூட்டம்
புதுச்சேரி: மழை நிவரணம் வங்கி கணக்கில் வந்துள்ளதா என கண்டறிய தட்டாஞ்சாவடி குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு புதுச்சேரி அரசு மழை நிவரணமாக 5 ஆயிரம் ரூபாய் அறிவித்தது.அதைதொடர்ந்து கடந்த 12 தேதி புதுச்சேரி அரசின் நிதி துறை மூலம் 3,54,000 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கில் மழை நிவாரணத் தொகை செலுத்தப்பட்டது. இந்நிலையில் மழை நிவாரண பயனாளிகள் பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருப்பதால் தங்களின் வங்கிக் கணக்கில் நிவாரணம் தொகை வரவில்லை என்றும், மேலும் ரேஷன் கார்டில் யார் பெயரில் வங்கி கணக்கு உள்ளது என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.இந்நிலையில், எந்த வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழில் பேட்டையில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் மக்கள் கூட்டம் நேற்று அலை மோதியது. அதனைத் தொடர்ந்து இதற்காக புதிய கவுண்டர்கள் குடிமை பொருள் வழங்கல் துறை அமைந்துள்ளது. இதனால் தட்டாஞ்சாவடி தொழில்பேட்டையில் வாகன நெரிசலும் ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.