மியாட் சிறுநீரகம், இருதய நிபுணர்கள் புதுச்சேரி, கடலுாரில் ஆலோசனை
புதுச்சேரி : மியாட் மருத்துவமனை சிறுநீரகவியல் மற்றும் இருதவியல் சிறப்பு மருத்துவர்கள் புதுச்சேரி, கடலுாரியில் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.சென்னை மியாட் மருத்துவமனை சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் உன்னிகிருஷ்ணன், நேற்று புதுச்சேரி தி.பாஷ் மருத்துவனை மற்றும் கடலுார் ஆர்காட் மருத்துவமனையில், சிறுநீரக தொடர்பான, சிறுநீரக கல், புரோஸ்டேட் பிரச்னைகள், சிறுநீரில் ரத்தம் உள்ளிட்ட சிறுநீரக நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.அதே போல, மியாட் இதய நோய் சிறப்பு மருத்துவர் மணிகண்டன், புதுச்சேரி, தி.பாஷ் மருத்துவமனை, கடலுார், ஆர்காட் மருத்துவமனையில், இதய நோய்கள் தொடர்பான, நெஞ்சுவலி, இதய துடிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், அதிக ரத்த அழுத்தம் உள்ளிட்ட இதய நோய்கள் பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.