உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊசுடேரி சாலையில் நள்ளிரவில் விபத்து ; இருவர் படுகாயம்

ஊசுடேரி சாலையில் நள்ளிரவில் விபத்து ; இருவர் படுகாயம்

வில்லியனுார்: வில்லியனுார் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட பைக் விபத்தில் ஆபத்தான நிலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்த கமலகண்ணன் மகன் அசோக்குமார், 22; புதுச்சேரி, துத்திப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி,கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் சேதராப்பட்டை சேர்ந்த சேகர் மகன் கலைசந்திரசேகரன், 25; வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இருவரும், அசோக்குமார் பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஊசுடு ஏரி - பொறையூர் சாலை சந்திப்பில் சென்றபோது, கனமழை மற்றும் அதிவேகம் காரணமாக அங்கிருந்த வேகத்தடையின்மீது பைக் ஏறியதில்,கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த இருவரும் கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கலை சந்திரசேகரன், மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப் பட்டார். விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து உதவி சப் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மெகா வேகத்தடையால் விபத்து ஊசுடு - பொறையூர் ஏரிக்கரை சாலை சந்திப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் இறந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் பெரிய அளவில் 2 மெகா சைஸ் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. தற்போது, அந்த மெகா சைஸ் வேகத்தடையால் விபத்து ஏற்பட்டு இருவர் படுகாயமடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை