கோப்புகள் வர தாமதம் அமைச்சர் வருத்தம்
அரியாங்குப்பம்: கோப்புகள் மாதக் கணக்கில் வராததால் பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளதாக, தென்னை சாகுபடி அம்சங்கள் பற்றிய கருத்தரங்கில் அமைச்சர் தேனீ ஜெயகுமார் பேசினார்.தென்னை சாகுபடியில் அம்சங்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கம் தவளக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேசியதாவது,கோப்புகள் மாதக் கணக்கில் வராமல் இருப்பதால், பல திட்டங்கள் செயல்படுத்த முடியாதது வருத்தமாக உள்ளது. விவசாயிகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.