உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிமென்ட் வாய்க்கால் பணி அமைச்சர் துவக்கி வைப்பு

 சிமென்ட் வாய்க்கால் பணி அமைச்சர் துவக்கி வைப்பு

வில்லியனுார்: உறுவையாறு செல்வா நகரில் பொதுப்பணித்துறை சார்பில், ஏரி வாய்க்கால் சீரமைக்கும் பணியை வேளாண் அமைச்சர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மங்கலம் தொகுதி, உறுவையாறு செல்வா நகர் பகுதியில் செல்லும்ஏரி வாய்க்காலை புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், ரூ. 2. 24 கோடி திட்ட மதிப்பில் சிமென்ட் வாய்க்காலாக மாற்றுவதற்கு வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் ஸ்ரீநாத், இளநிலை பொறியாளர் அருள்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை