உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மேம்பாலம் புனரமைப்பு அமைச்சர் ஆய்வு

மேம்பாலம் புனரமைப்பு அமைச்சர் ஆய்வு

புதுச்சேரி : புதுச்சேரி நுாறு அடி சாலை மேம்பாலத்தில் விரிசல் புனரமைக்கும் பணியினை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு செய்தார்.புதுச்சேரி நுாறு அடி சாலையில், போக்குவரத்து துறை அலுவலகம் எதிரில் உள்ள மேம்பாலத்தில் இரு பக்கமும் விரிசல்கள் ஏற்பட்டது.இது தொடர்பாக வந்த புகாரினைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்து விரிசல்களை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து நிபுணர்கள் குழு வர வைக்கப்பட்டு மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்து சரி செய்யும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் இப்பணி யினை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை