உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / படகு குழாமில் அமைச்சர் ஆய்வு

படகு குழாமில் அமைச்சர் ஆய்வு

புதுச்சேரி: புயல் மற்றும் கன மழையால் சேதம் அடைந்த நோணாங்குப்பம் படகு குழாமை, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார்.பெஞ்சல் புயல் மற்றும் கன மழை காரணமாக வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.இதனால் நோணாங்குப்பம் படகு குழாம் படித்துறையில் கட்டி வைத்திருந்த சுற்றுலா பயணிகளை பேரடைஸ் கடற்கரைக்கு அழைத்து செல்லும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுற்றுலா படகுகள் அடித்து செல்லப்பட்டன.இதேபோல் பேரடைஸ் கடற்கரையில் இருந்த உணவு விடுதி, சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் ஷவர், நிழல் கூடாரங்கள் சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து, அமைச்சர் லட்சுமிநாராயணன் நோணாங்குப்பம் படகு குழாமை நேற்று ஆய்வு செய்தார்.சுற்றுலாத்துறை இயக்குநர் முரளிதரன், துணை இயக்குநர் சுப்ரமணியன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை