தீபாவளி அங்காடி திறப்பு அமைச்சர் பங்கேற்பு
காரைக்கால்: காரைக்காலில் தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தையை அமைச்சர் திறந்து வைத்தார்.காரைக்காலில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து அமைத்துள்ள தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தை திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.அமைச்சர் திருமுருகன் தலைமை தாங்கி, தீபாவளி அங்காடி மற்றும் கிராம சந்தையை திறந்து வைத்தார். கலெக்டர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. இதில் மஞ்சள், நாட்டுச்சர்க்கரை, சீனி, சிறுதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.