உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அம்பேத்கர் சிலை புனரமைப்பு பணிக்கு அமைச்சர் பூமி பூஜை

அம்பேத்கர் சிலை புனரமைப்பு பணிக்கு அமைச்சர் பூமி பூஜை

வில்லியனுார்: கூடப்பாக்கம் பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை புனரமைக்கும் பணியை அமைச்சர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.புதுச்சேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கூடப்பாக்கம் பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் கிரானைட் தரை, உயர்தர நிழற்குடை, படிக்கள். சிலை சுற்றி மேடை, கிரில் கேட்டுடன் சுற்றி மதில் சுவர், சிறிய பூங்கா உள்ளிட்ட பணிகள் ரூ.28 லட்சம் செலவில் புனரமைப்பதற்கு ஆதிதிரவிடர் மற்றும் நலத்துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஊசுடு தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் தியாகராஜன், முத்தாலு முரளி, மல்லிகா, உலகநாதன், ஜெகதல பிரதாபன், உள்ளட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை