மேலும் செய்திகள்
அதிகமாக மது குடித்த பெயிண்டர் சாவு
19-Jun-2025
புதுச்சேரி:திடீர் மூச்சுத் திணறலால் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி விவசாயத் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், 70. கடந்த மாதம் புதுக்கோட்டை அருகே நடந்த கார் விபத்தில் காயமடைந்து, கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.உடனடியாக இந்திரா காந்தி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டதா என, டாக்டர்கள் பரிசோதித்தனர்.அதைத்தொடர்ந்து அவருக்கு நிமோனியா காய்ச்சலால் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கலாம் என, கருதி உடனடியாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19-Jun-2025