உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமைச்சர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்

அமைச்சர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்

திருக்கனுார்: பிறந்த நாளை முன்னிட்டு மண்ணாடிப்பட்டில் அமைச்சர் நமச்சிவாயம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புதுச்சேரி பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி ஏற்பாட்டில், அமைச்சர் பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மண்ணாடிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் திடலில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம் கேக் வெட்டி, மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வாதானுார் கிராமங்களை சேர்ந்த 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், பா.ஜ., பிரமுகர்கள் தில்லை, வீரராகவன், முனுசாமி, ராமலிங்கம், சேகர், சந்திரசேகரன், அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை