மேலும் செய்திகள்
போலீசாருக்கான பயிற்சி கடலுார் எஸ்.பி.,ஆய்வு
27-Oct-2025
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த, ஐ.ஆர்.பி.என்., சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன்,42; ஐ.ஆர்.பி.என்., சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர். இவர், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாப்பு வாகன டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தனது கிராமத்தில் அடிக்கடி தகராறு, பலரை தாக்கி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது திருக்கனுார் போலீசில் 2 வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக கதிரவனுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, பணிக்கொடை உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தன் மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜகுமார்தான் இதற்கு காரணம் என, அவர் மீது கோபத்தில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கூனிச்சம்பட்டு கிராமத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் பங்கேற்க வந்தார். அவரது காருக்கு முன்பாக திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்த கதிரவன் ஆத்திரமடைந்தார். தனது பைக்கை ஜீப் முன் நிறுத்தி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரை, தன் மீது வழக்கு பதிவு செய்ததற்காக ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். அமைச்சர் முன்னிலையில் இச்சம்பவம் நடந்தது, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜகுமார் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா, பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது, வழியில் தடை ஏற்படுத்துவது, அரசு ஊழியரின் பணிக்கு களங்கம் ஏற்படுத்துவது, சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மீது வழக்கு பதிந்து, கைது செய்தார். பின் அவரை, புதுச்சேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
27-Oct-2025