எம்.ஐ.டி., கல்லுாரி பேராசிரியருக்கு விருது
புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பேராசிரியை வள்ளிக்கு, சிறந்த கண்டுபிடிப்பிற்கான சிகரம் விருது வழங்கப்பட்டது.தனியார் தொலைக்காட்சி மூலம் ஆண்டுதோறும் வெவ்வெறு பிரிவுகளின் கீழ் சிறந்து விளங்குபவர்களுக்கு சிகரம் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, புதுச்சேரியில் நடந்த விழாவில், மாநிலம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய புதுமையான தயாரிப்பிற்கான சிகரம் விருது, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை பேராசிரியை வள்ளிக்கு வழங்கப்பட்டது. விருதினை, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு நரம்பு வழி ஊசி மூலம் உப்பு கரைசல் வழங்குவதில் இருக்கும் சிக்கலை தீர்க்க, 'உப்புக் கரைசல் தீர்வறிக்கை கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை சாதனம்' தயாரிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது.விருது பெற்ற கல்லுாரி பேராசிரியை வள்ளியை, மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், கல்லுாரி முதல்வர் மலர்க்கண் ஆகியோர் பாராட்டினர்.