ஆதிங்கப்பட்டு பள்ளியில் எம்.எல்.ஏ., புத்தகம் வழங்கல்
பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலை பள்ளியில், மாணவர்களுக்கு 2026-27ம் கல்வி ஆண்டிற்கான, பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் நான்சி ஏஞ்சலின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மோகன்தாஸ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி, வாழ்த்தி பேசினார். தமிழ் ஆசிரியர் ரகுநாதன் தொகுப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், பள்ளி ஊழியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் செல்வி வெர்ஜீனியா, யோகானந்தன், ராஜலட்சுமி, பூங்கொடி, லோகேஸ்வரி, மணிரேவா சங்கீதா, பிரதீபா, ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.