உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உப்பளம் தொகுதி மேம்பாட்டு பணிகள் அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை

உப்பளம் தொகுதி மேம்பாட்டு பணிகள் அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை

புதுச்சேரி : அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அதிகாரிகளை சந்தித்து, உப்பளம் தொகுதி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் உப்பனாறு பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தியதால் ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், வாணரப்பேட்டை காளியம்மன் தோப்பு, முருகசாமி தோப்பு, சின்ன எல்லையம்மன் கோவில் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி, கஸ்துாரிபாய் வீதி, காமராஜர் வீதி மற்றும் அப்துல்கலாம் வீதிகளில் ரூ.5.80 கோடி செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், பெரிய பள்ளி மற்றும் வீரர்வெள்ளி பகுதிகளிலுள்ள வீதிகளில் ரூ.12 கோடி செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, எம்.எல்.ஏ., பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் வீரசெல்வத்தை சந்தித்து வாணரப்பேட்டை, பெரிய பள்ளி மற்றும் வீரர்வெள்ளி பகுதிகளில் நடக்கவுள்ள பணிகளை ரூ.2 கோடி மதிப்பில், பகுதிப்பகுதியாக பிரித்து டெண்டர் வைத்து விரைவாக நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. இப்பணிகளை விரைவில் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ