மேலும் செய்திகள்
வடிகால் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
10-Jun-2025
புதுச்சேரி : வேல்ராம்பேட் மக்கள் நகரில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் சார்பில், கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முதலியார்பேட்டை தொகுதி, வேல்ராம்பேட் மக்கள் நகரில், பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்டம் சார்பில், 38 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பொதுப்பணித் துறை, நீர் பாசன கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
10-Jun-2025