உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏரி துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

ஏரி துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

பாகூர் : மதிக்கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் உள்ள உமரங்காடு ஏரியை, துார்வாரி ஆழப்படுத்தும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், பாகூர் தொகுதி மதிக்கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் உள்ள உமரங்கடு ஏரியை, 27 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் துார்வாரி ஆழப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூஜை செய்து துார்வாரும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இளநிலை பொறியாளர் சிவப்பிராகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !