உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் 25.09 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை அமைக்கும் பணியை, சிவசங்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். உழவர்கரை தொகுதி ஒம் சக்தி நகர் விரிவாக்கம், ராதா நகர் முத்துப்பிள்ளை பாளையம் சாலை மேம்படுத்த தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9.26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், ராதாகிருஷ்ணன் நகரில், சாலை அமைக்க 8.93 லட்சம் ரூபாயும், முத்துப்பிள்ளை பாளையம் கோமதி வீதியை மேம்படுத்த 6.90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை, ரோஜா நகரில்,சிவசங்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், செயற்பொறியாளர் மலைவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி