ரூ.33.56 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில், ரூ. 33.56 லட்சத்தில், சாலை அமைக்கும் பணியை, சிவசங்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். உழவர்கரை தொகுதிக்குட்பட்ட முனுசாமி பிள்ளை நகர், பல்கலை நகர், ஓம் சக்தி நகர், சாய்பாபா நகர் ஆகிய பகுதிளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சாலை அமைக்க, 33.56 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, சிவசங்கர் எம்.எல்.ஏ., முனுசாமி பிள்ளை நகரில், நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், செயற்பொறியாளர் மலைவாசன், உதவிப்பொறியாளர் கலிவரதன், இளநிலைப்பொறியாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.