கிரீல் கேட் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதுச்சேரி: அரியாங்குப்பம் சீர்திருத்தப்பள்ளியில் கிரீல் கேட் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அறைகளை சுற்றி கிரீல் கேட் அமைக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் 19.21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணியை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் சத்யமூர்த்தி, செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப்பொறியாளர் ஜலீல், இளநிலை பொறியாளர் தேவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.