உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வீடுகளில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த எம்.எல்.ஏ., எதிர்ப்பு

 வீடுகளில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த எம்.எல்.ஏ., எதிர்ப்பு

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் வீடுகளில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஊழியர்களிடம்வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. லாஸ்பேட்டை தொகுதி அசோக் நகர், பாரதிதாசன் வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர், தனது வீட்டில் பழுதடைந்த மின்மீட்டரை மாற்றிக் கொடுக்கும்படி மின்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதன் பேரில், லாஸ்பேட்டை மின்துறை இளநிலை பொறியாளர் பவித்ரன் தலைமையிலான ஊழியர்கள், நேற்று முன்தினம் பழுதடைந்த மின் மீட்டருக்கு பதிலாக, ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான புதிய ஸ்மார்ட் மின் மீட்டரை இலவசமாக பொருத்தினர். மேலும், அப்பகுதி வீடுகளில் பழுதடைந்த மின் மீட்டர்களுக்கு பதில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த மின்துறை ஊழியர்கள் நேற்று வந்திருந்தனர். தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., வைத்தியநாதன், தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்று, புதிதாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த எதிர்ப்புதெரிவித்து, மின்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த இளநிலை பொறியாளர் பவித்ரன் சோதனை அடிப்படையில் பழுதடைந்த மின்மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதற்கு,சோதனை அடிப்படையில் என்றால், மின்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் தொகுதிகளில் சென்று முதலில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துங்கள் என,தெரிவித்தார். மேலும், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் மின் மீட்டரை உடனடியாக அகற்ற வேண்டும் என ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, மின்துறை ஊழியர்கள் ஸ்மார்ட் மின் மீட்டரை அகற்றி கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை