உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் எம்.எல்.ஏ., பங்கேற்பு

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் எம்.எல்.ஏ., பங்கேற்பு

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொது நல அமைப்புகள் மின்துறை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி மின்துறை தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தி வருவதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொது நல அமைப்புகள் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்று, மின்துறை அலுவலக நுழைவு வாயில் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும். ப்ரீபெய்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, மின்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், பொது நல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ