/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறிவியல் கண்காட்சியில் முதலிடம் அரசு பள்ளி மாணவருக்கு எம்.எல்.ஏ., பாராட்டு
அறிவியல் கண்காட்சியில் முதலிடம் அரசு பள்ளி மாணவருக்கு எம்.எல்.ஏ., பாராட்டு
புதுச்சேரி: மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் சாதித்த மாணவர் முகமது ஆஷிப்பை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.,பாராட்டினார். புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் மாநில அளவில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், முத்தியால்பேட்டை அரசு துவக்கப்பள்ளி மாணவர் முகமது ஆஷிப் உருவாக்கிய சூரிய ஆற்றல் மூலம் தரை சுத்தம் செய்யும் கருவி இடம்பெற்றது. இந்த அறிவியல் படைப்புக்கு மாநில அளவில் முதல் பரிசு கிடைத்தது. இதற்கு தினமலர் சுழற்கோப்பை மற்றும் இன்டகரா சுழற் கோப்பை வழங்கப்பட்டது. சாதித்த மாணவனை முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ் குமார் பாராட்டினார். வட்டம் ஒன்று பள்ளி துணை ஆய்வாளர் அனிதா, பள்ளி தலைமையாசிரியர் பாலமுருகன், ஆசிரியர்கள் புஷ்பலதா, ரேவதி, ராஜம், நிரஞ்சனாதேவி, ஜெயந்தி, சசிகலா, ருக்மணி கலந்து கொண்டனர்.