உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தையில் உடன்பாடு பணிக்கு திரும்பிய பி.ஆர்.டி.சி.,ஊழியர்கள்

எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தையில் உடன்பாடு பணிக்கு திரும்பிய பி.ஆர்.டி.சி.,ஊழியர்கள்

புதுச்சேரி: பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொண்டு பணிக்கு திரும்பினர்.புதுச்சேரி பி.ஆர்.டி.சி., ஊழியர் சங்கம் மற்றும் பி.ஆர்.டி.சி., தினக்கூலி ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில், கடந்த 17ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியது. பி.ஆர்.டி.சி., தலைமைஅலுவலகம் அருகே இரவு பகலாக போராட்டம் நடத்தினர்.அவர்களிடம் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. இதில், பி.ஆர்.டி.சி., பொதுமேலாளர் கலியபெருமாள்,அரசு சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன், பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுரவ தலைவர் பிரேமதாசன், பி.ஆர்.டி.சி., ஊழியர் சங்கம், பி.ஆர்.டி.சி., தினக்கூலி ஒப்பந்த ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில், 14 ஆண்டுகள் பணிபுரிந்த மகளிர் கண்டக்டர்கள், 10 ஆண்டுகள் பணி புரிந்த தினக்கூலி, டிரைவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். எம்.ஏ.சி.பி., பலன்களை வழங்க வேண்டும். பி.ஆர்.டி.சிக்கு முழு நேர மேலாண் இயக்குநரை நியமிக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.இது தொடர்பாக மூன்று நாட்களில் பரிசீலனை செய்து முடிவை அறிவிப்பதாக பி.ஆர்.டி.சி., பொதுமேலாளர் கலியபெருமாள் உறுதியளித்ததை ஏற்று, 25ம் தேதி வரை தற்காலிகமாக போராட்டத்தைவிலக்கி கொண்டு பணிக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ