உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.ஐ.ஆர்., பணி விபரங்களை தெரிவிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை

எஸ்.ஐ.ஆர்., பணி விபரங்களை தெரிவிக்க எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு, சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு கோரிக்கை விடுத்துள்ளார். அவர், நேற்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆகியோரிடம் கொடுத்துள்ள மனு; புதுச்சேரியில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணி நேற்று துவங்கியுள்ளது. மாநிலத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் உள்ளோம். நாங்கள், தேர்தலை சந்தித்தபோது தேர்தல் துறையின் அனுமதியுடன் ஓட்டுச்சாவடி முகவர்களை நியமித்து, தொகுதி தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக உள்ளோம். தற்போது நடக்கும் வாக்காளர் பட்டியல் தீவிர திருப்ப பணி குறித்து எங்களுக்கு தெரிவிக்காமல், எங்கள் தொகுதியில் நடத்துவது வருத்தமளிக்கிறது. இப்பணியை சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுச் சாவடி முகவர்களை பயன்படுத்தி, வாக்காளர் உரிமையை நிலைநாட்டிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை