சென்டர் மீடியன் அமைக்க எம்.எல்.ஏ., பூமி பூஜை
புதுச்சேரி: கடலுார் சாலையில் 46.84 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பு கட்டை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது. கடலுார் சாலை, அரியாங்குப்பம் சிக்னல் முதல், போலீஸ் ஸ்டேஷன் வரை, தடுப்பு கட்டை அமைக்க தேசிய நெடுஞ்சாலை (பொதுப்பணித்துறை) மூலம் 46.84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், என்.ஆர்., காங்., நிர்வாகிகள், பொதுமக்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.