எம்.எல்.ஏ., பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து
பாகூர் : லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ.,விற்கு, முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.ஏம்பலம் தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., லட்சுமிகாந்தன் கிருமாம்பாக்கத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் என்.ஆர்.காங்., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கிருமாம்பாக்கத்தில் உள்ள தனது தந்தையும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான உத்திரவேலுவின் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நடந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்றுனா லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ.,விற்கு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். துணை சபாநாயகர் ராஜவேலு,எம்.எல்.ஏ.,க்கள் கே.எஸ்.பி., ரமேஷ், பாஸ்கர், முன்னாள் அமைச்சர் தியாகராஜன்,என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால், மாநில செயலாளர் ஜவகர், டாக்டர் நாராயணசாமி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.ஆறுபடை வீடு மருத்துவமனையில் லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் ரத்த தானம் செய்தனர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை என்.ஆர்.காங்., நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.